படம் ஓடவில்லை.! கடன் தொல்லை.! காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் பிரபல இயக்குனர்! – அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையோடு விளங்கிய செந்தில் ஜம்புலிங்கம். தற்போது காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல கோவிலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த, ‘பக்கத்து வீட்டு ரோஜா’ படத்தின் மூலம் துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து  வைத்தவர் செந்தில். இதை தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் 7 வருடம் துணை இயக்குனராக பணியாற்றினார். பிறகு பூந்தோட்ட காவல்காரன்’ ,  ‘பட்டிக்காட்டு தம்பி’, ‘படிச்ச புள்ள’, ஸ்ரீ தேவி நடித்த ‘தெய்வக்குழந்தை’, சரத்குமாரை வைத்து ‘தங்கமான தங்கச்சி.’காவல் நிலையம்’,’இளவரசன்’ என தொடர்ந்து 5  படங்களை இயக்கி ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தானாகவே வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரை பக்கம்  திரும்பி, சீரியல் இயக்கி வந்த இவர் பின் சீரியல்   நடிகராகவும் மாறினார். கல்கி, ருத்ரா, தங்கம், பொன்னூஞ்சல், நாயகி என்ற சீரியல்களை தேர்வு செய்து நடித்தார். இவர் சமீபத்தில் நடித்து வந்த ஒரு சீரியலில்  இருந்து இவரை திடீர் என விலக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இவர்,

விரத்தியின் காரணமாக தற்போது காஞ்சிபுரம் அருகே இருக்கும் ஒரு  கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இவரை போனில் தொடர்பு கொண்டாலும், பல சமயங்களில் போன் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.  சில சமயங்களில் போனை எடுத்து தன்னை தேடவேண்டாம் என்றும் தேடினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிறாராம்.எனினும் இவருடைய குரும்பதினர் போலீஸ் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply