திருமணத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு வருங்கால கணவர் குறித்த ரகசியம் கசிந்தது: மணமகள் எடுத்த முடிவு! அதிர்ந்த மாப்பிள்ளை வீட்டார்!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

திருமணத்திற்கு 5 மணிநேரத்திற்கு முன்பு தனது வருங்கால கணவன் குறித்த ரகசியம் தெரியவந்த காரணத்தால் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் அறிவுரையுடன் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண்.கிளாரா மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எல்லா பெண்களை போன்றும், பல எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்துள்ளார் கிளாரா.

வருங்கால கணவனிடம் தனது கனவுகள் குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொண்டார். இந்நிலையில், திருமணத்திற்கு 5 மணிநேரம் இருக்கையில், கிளாராவுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.அதில், நான் அவனை திருமணம் செய்துகொள்ளமாட்டேன், நீ திருமணம் செய்துகொள்ளப்போகிறாயா? என கேட்கப்பட்டிருந்தது.


இதனை படித்த கிளாரா, யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், தொடர்ந்து தனது வருங்கால கணவர் செய்த அநியாயங்களை தெரிவித்துள்ளார்.

அலெக்ஸ், அப்பெண்ணுக்கு அனுப்பிய தவறான செய்திகள் மற்றும் அப்பெண்ணை காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, நடந்தவை குறித்து தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.மேலும், தனக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்று கூறியதையடுத்து, அனைவருடனும் கலந்தாலோசித்து இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply