இந்த திகதிகளில் பிறந்தவங்கள கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்… வாழ்க்கை மிகவும் அழகா இருக்கும்..!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம்தான். அனைவரின் வாழ்க்கையையும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஏனெனில் திருமணத்திற்கு முன்பான நமது நடத்தையும், திருமணத்திற்கு பிறகான நமது நடத்தையும் முற்றிலும் வேறாக இருக்கும்.

திருமணம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவை நல்ல மாற்றாங்களா இல்லை கெட்ட மாற்றங்களா என்பது நமது வாழ்க்கைத்துணை கையில்தான் உள்ளது.

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி திருமணத்திற்கு பின் அவர்களின் செய்கைகளில் நிறைய மாற்றங்கள் தெரியும்.

அதற்கு நாம் பிறந்த தேதி ஒரு முக்கிய காரணமாகும். இந்த பதிவில் நீங்கள் பிறந்த திகதி உங்கள் திருமண வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

எண் 1- 1,10,19,28

பிறந்த எண் 1 ஆக இருந்தால் அவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உள்ளவர்கள். தான் செய்யும் அனைத்திலும் தான்தான் வழிநடத்த வேண்டும் என்று விரும்புவார்கள்.

மேலாதிக்கம் அதிகம் உள்ள இவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை ஆளவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் சொல்வதே எப்பொழுதும் கடைசி வார்த்தையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

பிறந்த எண் 1 ல் பிறந்தவர்கள் எப்பொழுதும் காதலில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். 2019 ல் இவர்கள் நீண்ட நாள் காதல் நிறைவேறும், திருமணம் ஆனவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

எண் 2- 2, 11, 20, 29

எண் 2 ல் பிறந்தவர்கள் பொதுவாக அமைதியானவர்களாவும், அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

மனரீதியான தொடர்பில் இருப்பதை விட உறவில் இருப்பதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். உணர்வுரீதியாக இணைதிருப்பதை விட உடல்ரீதியாக இணைந்திருப்பதை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். மாறிக்கொண்டே இருக்கும் இவர்களின் மனநிலையை சமாளிப்பது மிகவும் கடினமாகும்.

எனவே அவர்கள் எப்பொழுதும் நிலையான மனமுடையவருடன் காதலில் இருப்பது நல்லது. இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்வில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பார்கள்.

எண் 3 – 3,12, 21, 30

திருமண வாழ்க்கையை பொறுத்தவரை இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமானது கிட்டதட்ட எண் 1ல் பிறந்தவர்களின் குணத்தை போன்றுதான் இருக்கும்.

உறவுகளில் மிகவும் எதார்த்தத்தை கடைபிடிக்கும் இவர்கள் இதயம் சொல்வதை விட மூளை சொல்வதைத்தான் கேட்பார்கள். இவர்கள் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ள கூடியவர்கள்.

இவர்களுக்கு ரொமான்டிக்காக நடந்துகொள்ள தெரியாது, எனவே காதலிக்க தெரிந்த ஒருவருடன் உறவில் இருப்பது இவர்கள் உறவில் சமநிலையை ஏற்படுத்தும்.

எண் 4- 4, 13, 22, 31

இவர்கள் எப்பொழுதும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்பவர்கள். இந்த திகதிகளில் பிறந்தவர்களிடம் நிச்சயம் ஒரு தனித்துவமான குணம் இருக்கும்.

இவர்களுக்கு காதலில் பெரிய நாட்டம் இல்லாமல் இருந்தாலும் எப்பொழுதும் தன் துணைக்கு துரோகம் செய்யமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கைத்துணை சொல்வதை அப்படியே கேட்டு நடப்பார்கள். தங்கள் உறவுகளை காப்பாற்றிக்கொள்ள எப்பொழுதும் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்வார்கள்.

எண் 5- 5, 14, 23,

எண் 5 ல் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு முன் நிறைய காதல்கள் இருக்க வாய்ப்புள்ளது. தனக்கு சரியான துணையை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அடிக்கடி ஆட்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினையே இவர்களுக்கு சில காலத்திலேயே உறவுகளில் சலிப்பு ஏற்பட்டுவிடும். இதனால்தான் அவர்கள் மாற்றங்களையும், சாகசங்களையும் விரும்புகிறார்கள். புதிது புதிதாக காதலிப்பதில் இவர்களுக்கு இணை இவர்கள் மட்டுமே.

5 ஆம் எண்ணில் பிறந்தவர்களை சமாளிக்க கூடியவர்கள் 7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டுமே.

எண் 6- 6,15, 24

எண் 6 ல் பிறந்தவர்கள் அமைதி மற்றும் காதலை விரும்புபவர்கள் ஆவர். வசீகரமும், அதீத காதலும் இவர்களின் சிறப்புகளாகும். ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படுவது இவர்களின் பலவீனமாகும்.

இவர்களின் மனதை எளிதில் மாற்றிவிடலாம் எனவே இவர்கள் திருமண உறவிற்கு வெளியே வேறு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

இவர்கள் தங்கள் துணையுடன் உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்வதை காட்டிலும் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவே அதிகம் விரும்புவார்கள்.

எண் 7- 7, 16, 25

7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக குறைவாக பேசக்கூடியவர்கள். அதற்காக அவர்கள் காதலிக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.

சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.

சிறிய விஷயங்களை கூட அதிகம் ஆராய்ந்து தலைபாரத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதனால் அடிக்கடி தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் எழும். இது அவர்களின் வாழ்க்கைக்கு துளியும் ஏற்றதல்ல.

எண் 8- 8, 17, 26

இவர்கள் வலிமையானவர் ஆனால் அதிக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இவர்கள் அனைவராலும் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவார்கள்.

பொதுவாக எண் 8ல் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் அதிக துன்பங்களுக்கு ஆளாவார்கள். காதல், திருமணம் என்று வரும் போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் மனது கூறுவதை அப்படியே செய்யக்கூடியவர்கள். தங்கள் துணையை தேர்ந்தெடுக்கவும், அவர்களுடன் முழுமையாக இணையவும் இவர்கள் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருமுறை இணைந்து விட்டால் அதன்பின் பிரியவே மாட்டார்கள்.

இவர்கள் 8 மற்றும் 4 ஆம் தேதிகளில் பிறந்தவர்களை தவிர்ப்பது நல்லது.

எண் 9- 9, 18, 27

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு அதிகம் இருக்கும். அதனால்தான் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு கோபமும், ஆற்றலும் அதிகம் இருக்கும்.

இவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள் ஆனால் அதனை ஒருபோதும் வெளிக்காட்டி கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு உடலுறவில் அதிகளவு விருப்பம் இருக்கும் எனவே அதற்கு ஏற்றாற்போல துணை இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் சரியான துணை அமைந்து விட்டால் அவர்களை அணுஅணுவாய் காதலிப்பார்கள்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply