தனது காதல் மனைவிக்காக17 வருடங்களாக கணவன் செய்யும் நெகிழ்ச்சியான செயல்….!! வியப்பில் உறைந்து போன இலங்கையர்கள்…!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

இலங்கையில் தனது காதல் மனைவிக்காக கணவன் ஒருவரின் செயற்பாடு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் ஜகத் – அனோமா காதல் தம்பதியினர் திருமண பந்தத்தில் இணைந்தனர்.எனினும், சில மாதங்களில் அனோமா தசைத்திசு நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நோயின் தாக்கம் காரணமாக அனோமாவின் உடலிலுள்ள சதைகள் கரைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோயில் பாதிக்கப்பட்டுள்ள தனது காதல் மனைவியை காப்பாற்றுவதற்கு எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளை கணவர் ஜகத் மேற்கொண்டுள்ளார்.மனைவிக்காக அவர் படும் கஷ்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகளவாக பேசப்பட்டது.இந்நிலையில், காதலர் தினமான கடந்த 14ம் திகதி, ஜகத் – அனோமா காதல் தம்பதியரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேடிச் சென்றுள்ளார்.

நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனோமாவுக்கு உதவும் நோக்கில் நாமல் அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.இதன்போது காதல் தம்பதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

கடந்த 17 வருடங்களாக பாதிக்கப்பட்ட தன் மனைவியை பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும் ஜகத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply